2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Monday, October 3rd, 2022

2022 ஆம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், பௌதீகவியல்,இரசாயனவியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் பணப்பரிசு அடங்கியது.

ஒக்டோபரின் தொடக்கத்தில், ஆறு நாட்கள் ஆறு பிரிவுகளுக்கான பரிசுகள் அறிவிக்கப்படும்.

உலகம் முழுவதிலுமிருந்து புதிய முகங்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் இந்த நோபல் பரிசு பட்டியலில் இடம் பெறுவர். அதில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு இன்று மருத்துவ துறைக்கான விருதுடன் ஆரம்பமானது.

நாளை செவ்வாய்கிழமை பௌதீகவியல், புதன்கிழமை ,இரசாயனவியல் மற்றும் வியாழன் இலக்கியம், வெள்ளிக்கிழமை அமைதிக்கான நோபல் பரிசுகளும், 10ஆம் திகதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படும்.

கடந்த வருடம் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜுலியஸ் (David Julius) மற்றும் ஆர்டம் படாபௌடியன் (Ardem Patapoutian) ஆகிய இருவருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கபட்டது.

வெப்பநிலை மற்றும் தொடுதல் மூலமாக உடலில் நடக்கும் மாற்றங்களை, உடலை தொடாமல் அறியும் உணரிகளைக் கண்டுபிடித்ததற்காக இந்த இரு ஆராய்ச்சியாளர்களும் நோபல் பரிசு பெற்றனர்.

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: