2022 ஆம் ஆண்டில் 1ஆம் வகுப்பில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிமம் வெளியானது

அரச பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டில் 1ஆம் வகுப்பில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிவம், இன்றையதினம் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பான மாதிரி விண்ணப்ப படிவம், www.moe.gov.lk என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.
2022 ஆம் ஆண்டில் தங்கள் குழந்தைகளை அரச பாடசாலைகளில் 1 ஆம் வகுப்பில் சேர்க்க விரும்பிய பெற்றோர்கள், வெளியிடப்பட்டுள்ள மாதிரி படிவம் மற்றும் அறிவுறுத்தல்களின்படி தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபருக்கு, பதிவு தபால் ஊடாக அனுப்ப வேண்டும் என்று அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
குறித்த விண்ணப்ப படிவத்தை எதிர்வரும் ஜூன் 30, 2021 க்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
Related posts:
வடபகுதி மக்களுக்கு நாளை தீபாவளிக் கொண்டாட்டம் - ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன் த...
பசுவதை சட்டத்தை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் விஷேட நிகழ்வு!
கொரோனா தடுப்பூசியை கொள்வனவுக்காக இலங்கைக்கு உலக வங்கி 80.5 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம்!
|
|