2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை நாளை ஆரம்பம் – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Sunday, January 2nd, 2022

2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை 03 ஆம் திகதிமுதல் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், மாணவர்கள் புதிய வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், கடந்த தரங்களில் விடுபட்ட பாடங்களையும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கல்வித்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடத்திட்டங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இது முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

000

Related posts: