2022 ஆண்டுக்கான பாதீடு அடுத்த மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் – அமைச்சர்கள் அதிகாரிகளுக்கள் வெளிநாடு செல்லத்தடை!
Sunday, October 17th, 20212022 ஆண்டுக்கான வரவு – செலவு ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அடுத்த மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில், அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையை அமைச்சர்கள், இராஜங்க அமைச்சர்கள், அமைச்சகங்களின் செயலாளர்களுக்கும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் பேராசிரியர் பீ.பி. ஜயசுந்தர அனுப்பியுள்ளார்.
அரச வட்டாரங்களின் தகவலின்படி, வரவு – செலவுத் திட்டத்தை வெற்றி கொள்வதற்காக அனைத்து தரப்பினரும் முடிந்தவரை பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் ஜனாதிபதியின் செயலாளர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவால் அடுத்த மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தகவல் அறியும் சட்டமூலம்: ஒரு சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது!
இன்றுமுதல் சலுகை விலையில் தேங்காய்!
மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்களை வழங்குவதே அரசின் நிலைப்பாடு: நாமல் ராஜபக்ஸ!
|
|