2021 வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 30 ஆயிரம் ஆட்சேபனைகள் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Thursday, December 2nd, 2021

2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்சேபனைகளும் உரிமைகோரல்களும் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிடைத்துள்ள மேன்முறையீடுகள் தற்போது பரிசீலிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மாவட்ட உதவி மற்றும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர்களின் கண்காணிப்பின் கீழ் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேநேரம் 2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு எதிர்வரும் 31 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: