2021 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க நிதிச் சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தினார்!

Wednesday, September 15th, 2021

2021ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க நிதிச் சட்டமூலம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் கையெழுத்திடப்பட்டு சான்றுரைப்படுத்தப்பட்டுள்ளது..

கடந்த 07 ஆம் திகதி இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அத்துடன் இதற்கு ஆதரவாக 134 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நிதிச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பின்போது எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல வாக்கெடுப்புக் கோரியமையால் இந்தச் சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதற்கைமைய இந்த நிதிச் சட்டம் இன்று 15 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: