2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Friday, January 21st, 2022

2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (22) நடைபெறவுள்ள நிலையிலி அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

சிங்கள மொழி மூலத்தினூடாக 2 இலட்சத்து 55 ஆயிரத்து 62 பேரும், தமிழ் மொழி மூலத்தினூடாக 85 ஆயிரத்து 445 பேரும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கொவிட் வைரஸ் பரவல் காரணமாக பல முறை ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறதனதொரு நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி மேற்படி பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்டது.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுள் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்காக 108 தனியான பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேநேரம் புலமைப்பரிசில் பரீட்சைக்காக 496 பரீட்சை நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.

கொவிட் தொற்றுக்குள்ளான பிள்ளைகள் அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்குச் சென்று பிசீஆர் அல்லது ரெபிட்அன்டிஜன் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்து விசேட நிலையத்தில் பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் அறிகுறிகளைக்கொண்ட மாணவர்களுக்கு அந்தந்த மையங்களில் ஒரு சிறப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் தேர்வுக்கு முகம்கொடுக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் பெற்றோர்கள் உட்பட மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: