2020 இல் நிலக்கண்ணி வெடிகளற்ற நாடாக இலங்கை மாற்றமுறும்!

2020ஆம் ஆண்டில் இலங்கை நிலக்கண்ணி வெடிகளற்ற நாடாக மாற்றமடையும் என டேஷ் என்ற நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஆனந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டில் இலங்கையை நிலக்கண்ணி வெடிகளற்ற நாடாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அண்மையில் ஜப்பான் அரசாங்கம் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக 11.5 கோடி வழங்கியுள்ளது. ஜப்பான் அரசாங்கத்தின் அடிப்படை மானிட பாதுகாப்பு திட்டத்திற்கமைய இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவியைப் பயன்படுத்தி இலங்கையை நிலக்கண்ணி வெடிகளற்ற நாடாக உருவாக்க எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். வடக்கில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம் - இலங்கைக்கு பாதிப்பு இல்லை என அறிவிப்பு!
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜுலை மாதம் 5 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்...
|
|