2020 ஆம் ஆண்டு ஜனவரியில் மாணவர்களுக்கான சீருடை வழங்கும் பணிகள் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும!

Wednesday, November 27th, 2019

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத்துணி தொடர்பில் கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கவனம் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தமது முதல் பணியாக பாடசாலை மாணவர்களுக்கு சீருடைத்துணியை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சரை விரைவாக வழங்குவதே முக்கிய பணியாகும் என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கான இறுதித் தவணை விடுமுறை ஆரம்பமாகின்றது என்பதினால் இதற்கு முன்பாக சீருடைத்துணியை அல்லது அதற்கான வவுச்சரை வழங்க முடியாது. அடுத்த வருடம் முதலாம் தவணை ஆரம்பமாகும் முதல் வாரத்திற்குள் சீடைத்துணி அல்லது அதற்கான வவுச்சர் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஏற்பட்ட தாமதத்திற்கான காரணம் ஜனாதிபதி தேர்தல் பணிகள் காரணமாக தற்போது இருந்த அரசாங்கம் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளை வழங்குவது தொடர்பில் ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையே காரணமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts: