2020ஆம் ஆண்டில் முழுமையடையும் – கல்வி அமைச்சர் அகிலவிராஜ்!
Wednesday, September 19th, 2018அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத் திட்டம் 2020ஆம் ஆண்டில் முழுமையடையும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளித்த போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இதுவரை 13 ஆயிரத்து 87 வேலைத்திட்டங்கள் இதன் கீழ் ஆரம்பிக்கப்பட்டு, இதுவரை 9101 வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் 3986 திட்டங்கள் நிறைவு செய்யப்படாமல் உள்ளன.அவை 2020ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்படும் எனவும் இதுவரை 70 சதவீத வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
Related posts:
போதை பொருள் பாவனையே வறுமை அதிகரிப்பதற்கு காரணம் – ஜனாதிபதி!
ஜெனீவா குற்றச்சாட்டுக்கான வரைவு பதில் நாளை மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும் - அமைச்சர் தி...
அரச அச்சகத் துறைக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கக் கோரி தேர்தல் ஆணையம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்!
|
|