2020ஆண்டு இலங்கையில் இலத்திரனியல் புகையிரத சேவை!

Tuesday, December 6th, 2016

2020ஆம் ஆண்டளவில் இலங்கையில் இலத்திரனியல் ரயில்சேவைகள் அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சு வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற விசேட தொழில்நுட்ப மாநாட்டில் இன்று தெரிவிக்கப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வெயாங்கொடையில் இருந்து பாணந்துறைவரையும், பொல்ஹாவெல நகரில் இருந்து வெயாங்கொட வரையிலும், ராகமையில் இருந்து நீர்கொழும்பு வரையில் இந்த ரயில்சேவை முதல் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும் கொழும்பிலிருந்து பாணந்துறை வரையிலும் மருதாணை தொடக்கம் ராகம, மருதானையில் இருந்து ஹோமாகம வரையிலான ரயில் சேவை மேற்கொள்ளப்படும். இந்த திட்டம் தொடர்பாக திட்டப்பணிப்பாளர் பாலித சமரசிங்க தெரிவிக்கையில் இத்திட்டத்திற்கான மொத்தசெலவு 625 மில்லியன் அமெரிக்க டொலர் என்று தெரிவித்தார்.

6db0b24e10cf173f042f671e46f959a2_XL

Related posts: