2019 க்கான வருடாந்த இடமாற்றம் மார்ச் 1 ஆம் திகதி முதல் நடைமுறை!

பொது நிர்வாக அமைச்சினால் மேற்கொள்ளப்படவிருந்த 2019 க்கான வருடாந்த இடமாற்றங்கள் யாவும் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுமென பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட திட்டமிடப்பட்டிருந்த மேற்படி இடமாற்றங்களை மார்ச் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துமாறு அரச சேவைகள் ஆணைக்குழு அறிவித்ததற்கமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை திட்டமிடல் சேவை, அரச முகாமைத்துவ சேவையாளர் சேவை, விசேட தர உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்கள் பிற்போடப்பட்டுள்ளதாகப் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். மேற்படி வகையான உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களைத் தவிர ஏனையோரின் இடமாற்றங்களில் மாற்றமில்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|