2019 இல் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் -மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்

அடுத்த வருடம் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
குப்பை அச்சுறுத்தலுக்கு ஒரு தீர்வைப் பெறும் வகையில் அடுத்த வருடம் ஜீன் மாதம் திண்மக்கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.
பாடசாலைகளிலுள்ள கழிவுகளை அகற்றும் வகையில் பாடசாலை மாணவர்களும் இந்தத் திட்டத்தை மேற்கொள்ளலாம் எனக் குறிப்பிட்ட அமைச்சர் ஆனந்தா பாடசாலை மாணவர்களே ஏனைய பாடசாலைகளுக்கு முன்மாதிரியாக முதலில் இந்த திட்;டத்தை செயற்படுத்தலாம் எனக் கூறினார்.
மீதொட்டமுல்ல குப்பை மேட்டு அனர்த்தத்தில் டீ.எஸ்.சேனநாயக்க பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து 1 கிராம் குப்பைக் கூட தனது பாடசாலையிலிருந்து வெளியே போகக்கூடாதென டீ.எஸ்.சேனநாயக்கா பாடசாலை தீர்மானித்ததையும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|