2019 இல் இலங்கைக்கு ஒரு இலட்சம் கோடி தேவை!

Monday, February 6th, 2017

இலங்கை அரசாங்கம் 2019 ஆம் ஆண்டு வாங்கிய கடன்களுக்கான மீள்கொடுப்பனவாக 7 பில்லியன் அமெரிக்க டொலரை (1,05,000 கோடி ரூபா) செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 70 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை ஸ்ரீலங்கா அரசாங்கம் பெற்றுள்ளதுடன், இதில் 10 வீதமான கடன் தொகையை சீனாவிற்கு மாத்திரம் செலுத்த வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு நடத்திய பேச்சுவார்த்தைக்கு அமைய 1.45 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம்  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இணக்கம் தெரிவித்திருந்தது.

இந்த கடனை வழங்குவதற்கான முதலாவது இலங்கையின் பொருளாதார திறன் வெளிப்பாட்டு மீளாய்வு நிறைவுசெய்யப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக 162 தசம் 6 மில்லியன் அமெரிக்க டொலரை ஸ்ரீலங்காவிற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ளது.

நிதிப்பற்றாக்குறையை குறைத்தல், அந்நிய செலாவணி கையிருப்பை கட்டியெழுப்புதல், பேரளவு பொருளாதார ஸ்தீரத்தன்மையை மீளமைப்பதற்கான எளிமையான வரிக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தல் மற்றும் வளர்ச்சியை ஊக்குவித்தல் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கத்தின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பு வழங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சவாலான சூழலுக்கு மத்தியில் இலங்கையின் திறமை வெளிப்பாடுகள் பரந்த அளவில் திருப்தி அளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பதில் தலைவரும் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளருமான ரோ ஜொங் கூறியுள்ளார்.

பேரளவு பொருளாதாரம் மற்றும் நிதி நிபந்தனைகள் ஸ்தீரமடைய ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், பணவீக்க போக்கும் வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறியுள்ளார்.

preview-GOVERNMENT_LOGO_zpify

Related posts: