2018 ஜனவரியிலிருந்து நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு – அமைச்சர் தலதா!
Friday, December 22nd, 2017எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து நீதிபதிகளின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகளை நீதியமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் நீதித்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
நீதித்துறை சேவை சங்கத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான மாநாடும் கருத்தரங்கும் கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த போது அதில் பங்கு பற்றி உரையாற்றும் போதே அமைச்சர் தலதா அத்துகோரள மேற்படி தகவலைத் தெரிவித்துள்ளார்.
நீதித்துறையின் செயற்பாடுகள் பற்றிய பல்வேறு தகவல்களை அவர் அங்கு தெரிவித்ததுடன் நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் மேம்பாட்டுக்காக ஜனாதிபதியும் பிரதமரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் எப்பொழுதும் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்;
தற்போது சுமார் ஆறு இலட்சத்து ஐம்பதாயிரம் வழக்குகள் தீர்க்கப்படாத நிலையில் நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கின்றன. இவ்வாறு உயர் நீதிமன்றம் உட்பட மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் பிரதேச நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை துரிதமாகத் தீர்ப்பதற்காக வேண்டிய அறிவுறுத்தல்கள் அமைச்சால் வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சு மேற்கொண்டுள்ளது.
அத்துடன் இதற்காக நீதியரசர்கள் நீதிபதிகள் அரச சட்டத்தரணிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நீதித்துறை உத்தியோகத்தர்களின் தொகையை அதிகரிக்கும்படியும் அவ்வாறே நீதித்துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஆலோசனைகளையும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்கியிருந்ததாகவும் அதற்காக அவர்களின் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஜனவரியிலிருந்து நீதிபதிகள் மற்றும் நீதித்துறை உயர் உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நீதி அமைச்சு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|