2018 ஆம் ஆண்டில் வரவுசெலவு மதிப்பீடு 3982 பில்லியன் ரூபா!

Thursday, September 14th, 2017

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான மதிப்பீட்டு சட்டமூல வரைவை வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர இந்த சட்டமூல வரைவை அமைச்சரவையில் தாக்கல் செய்துள்ளார்.இதற்கு அமைய 2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த செலவு 3 ஆயிரத்து 982 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதில் 2 ஆயிரத்து 5.1 பில்லியன் கடனை திரும்ப செலுத்தவும் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள விதவை மற்றும் அனாதை குழந்தைகள் சட்டமூலங்களின் கீழ் செலவிடப்படவுள்ளது.2018 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் செலவு ஆயிரத்து 308.9 பில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.மேலும், மதிப்பீடு செய்யப்பட்டுள்ள மூலதன செலவு 668 பில்லியன் ரூபா. 2018 ஆம் ஆண்டில் அரச வருமானம் மற்றும் வெளிநாட்டு உதவி என 2 ஆயிரத்து 174 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: