2018 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ரயில்களில் மோதுண்டு 99 பேர் பலி!

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் ரயில் விபத்துக்களில் 99 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுரபிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த மரணங்கள் புகையிரத கடவைகளில் கவனயீனமாக வாகனங்களை செலுத்துதல், புகையிரத மிதி பலகையில் பயணித்தல், செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டு ரயில்பாதையில் நடத்தல், தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொள்ளல், ஓடும் ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்து கீழே விழுதல் போன்ற காரணிகளினால்சம்பவித்துள்ளன.
2017ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 517 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.
Related posts:
அமைச்சர் கபீர் ஹாசீம் இராஜினாமா?
"பதிவு நீதிபதி” என்னும் புதிய நிர்வாக நிலை அனைத்து நீதிமன்றங்களிலும் உருவாக்கப்படும் - நீதியமை...
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கல் நிறுத்தம் - அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்...
|
|