2018இல் உலகப் பொருளாதார மாநாடு இலங்கையில்!  

Tuesday, January 24th, 2017

எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார மாநாடு இலங்கையில் நடைபெறும் என டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உலகப் பொருளாதார மாநாடு இம்முறை சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். எதிர்வரும் ஆண்டு இலங்கையில் உலகப் பொருளாதார மாநாட்டை நடாத்த சந்தர்ப்பம் வழங்குமாறு, மாநாடு ஏற்பாட்டாளர்களிடம் இலங்கை பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.

இந்தக் கோரிக்கையை மாநாடு ஏற்பாட்டாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இலங்கையில் அடுத்த ஆண்டு மாநாட்டை நடாத்த முடியும் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் 55 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர் எனவும் 300 அமைச்சர்கள் பங்கேற்றிருந்ததுடன், உலகின் முன்னணி வர்த்தகர்கள் பங்கேற்றிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டின் போது இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரச தலைவர்கள், வர்த்தகர்களுடன் பிரதமர் தலைமையிலான பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கைக்கு பல்வேறு நலன்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடுத்த ஆண்டு உலகப் பொருளாதார மாநாட்டை நடாத்துவதற்கு உத்தியோகப்பற்றற்ற ரீதியில் மாநாடு ஏற்பாட்டாளர்கள் இணங்கியுள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

1262680474Untitled-1_mini

Related posts: