2018ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் உறுதிப்படுத்தல் இன்று!

Thursday, October 25th, 2018

இவ் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் இன்றையதினம்  உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தல் 2018 வாக்காளர் பெயர் பட்டியலுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

2017 ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலுக்கு அமைய ஒரு கோடியே 57  இலட்சத்து 60 ஆயிரத்து 867 பேர் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இம்முறை அது இரண்டு இலட்சத்தால் அதிகரிக்கக்கூடும் என தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்ப்பார்த்துள்ளதாக உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.

Related posts: