2017 மற்றும் 2019 விட ஜனவரி மாதத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் -வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை!

Wednesday, February 1st, 2023

2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு ஜனவரி மாதத்தில் நாட்டில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 2022 இல் மொத்தம் 8,197 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் . ஆனால் இந்தாண்டு ஜனவரியில் 8,768 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டில், நாட்டில் மொத்தம் 76,689 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளன, இது 2017 மற்றும் 2019 க்குப் பின்னர் நாட்டில் மூன்றாவது அதிக எண்ணிக்கையில் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் ஜனவரியில் பதிவாகியுள்ள நோயாளர்களின் எண்ணிக்கையின்படி, மேல் மாகாணத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“50% நோயாளர்கள் மேல் மாகாணத்தில் இலிருந்து பதிவாகியுள்ளன. 21% கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும், 6% களுத்துறை மாவட்டத்திலும், 13% புத்தளம் மாவட்டத்திலும், 13% நோயாளர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கல்முனை மாவட்டங்களிலும் பதிவாகியுள்ளன.

எவ்வாறாயினும், ஒவ்வொரு வருடமும் நவம்பர் முதல் பெப்ரவரி வரையிலான வடகீழ் பருவ பெயர்ச்சி ஆரம்பமாகவுள்ள நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் டெங்கு நோயினால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வைத்தியர் எச்சரித்துள்ளார்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது, ​​இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த கொடிய நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் மிகவும் விழிப்புடன் செயற்பட வேண்டும் மற்றும் டெங்கு நுளம்புகள் பரவுவதைத் தடுக்க தமது சுற்றுப்புறங்களில் உள்ள நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து தமது ஆதரவை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: