2017 பாதீட்டில் விவசாயத்துக்கு முன்னுரிமை!

Thursday, November 10th, 2016

வரும் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தள்ளார்.

அரசாங்கத்தின் இரண்டாவதும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 70ஆவதும் வரவு – செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.

இந்த வரவு – செலவுத் திட்டம் மீதான வாசிப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு வழங்குவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். விவசாயத்துக்காகப் பயன்படுத்தாத நிலங்களை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். கலப்பு விவசாய முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.

பொருளாதார ரீதியில் பயன்படுத்தப்படாதுள்ள காணிகளை, விவசாயத்துக்காக வழங்குவோம். விவசாயத்தின் மூலம் பெறப்படும் வருவாயானது, மற்றைய நாடுகளில் பெறப்படும் வருமானத்தின் பாதித்தொகையாகும். விவசாய சமூபகார நிலையங்களை நிறுவுவோம்.

புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய நடவடிக்கைகளுக்காக 15 சதவீத வட்டி நிவாரணம் வழங்கப்படும். விவசாயத் துறைக்காக 20 ஆயிரம் ஏக்கர் காணி வழங்கப்படும்.

896029103b3

Related posts: