2016 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் 72,621 மேன்முறையீடுகள்!

Monday, October 10th, 2016

2016 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பு தொடர்பில் 72,621 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகூடிய தொகையாக 21,499 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொசமட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தே குறைவான மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் கூறுகின்றார்.

மேலும் 2016 ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பு தொடர்பில் 1213 ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

Election-Secretariat1

Related posts: