2016ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இருவாரத்தில் வெளிவரும்!
Friday, March 10th, 20172016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரை, 5669 நிலையங்களில் நடைபெற்றது.
கடந்த வருடம் சாதாரண தரப் பரீட்சையில் சுமார் 7 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆயுதங்களுடன் கைதான பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமறியல்!
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படாதவர்கள் யுத்தத்தில் இறந்துவிட்டனர் - இராணுவத் தளபதி!
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு - அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாகக் குறைப்பு!
|
|