2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக இலாபத்தை பதிவு செய்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

Tuesday, April 19th, 2022

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த காலாண்டில் 1.7 மில்லியன் டொலர் லாபத்தைப் பதிவு செய்துள்ளது. கொரோனா தொற்றுநோய் பாதிப்பிலும் இவ்வளவு லாபத்தைப் பதிவு செய்திருப்பது சிறப்பு என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டுமுதல் இன்று வரையிலான நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இலாபம் ஈட்டியது இதுவே முதல் தடவையாகும்.

2021-22 நிதியாண்டில் ஊழியர்களின் செலவுகள் மற்றும் மேல்நிலைகளைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்த இலக்கை எட்ட முடிந்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: