2000 ரூபா நிவாரண பணம் கிடைக்காதவர்கள் பிரதேச செயலாளர்களிடம் முறையிடலாம் – பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி அறிவிப்பு!

Thursday, August 26th, 2021

2000 ரூபா நிவாரண பணம் கிடைக்காதவர்கள் அது தொடர்பில் பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும் என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

நாட்டின் அநேகமான பகுதிகளில் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கான 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது.

இதுவரை கொடுப்பனவு கிடைக்காத அல்லது கொடுப்பனவிற்கு தெரிவு செய்யப்படாதவர்கள் தங்களின் முறையீட்டை பிரதேச செயலாளரிடம் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் உரியவாறு முன்னெடுக்கப்படுவதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி சுட்டிக்காட்டியுள்ளது

இதேவேளை

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் 10,000 ரூபா நிவாரணப் பொதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்காக இந்த சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 10,000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதி வழங்க வேண்டியது அத்தியாவசியம் இல்லை என அந்த சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் 10,000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதியை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி செயலணியால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: