200 விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நுகர்வோர் விவகார அதிகார சபை!

Thursday, September 12th, 2019

நிர்ணய விலையினை விட அதிக விலைக்கு கோதுமை மாவினை விற்பனை செய்த 200 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

வாழ்க்கைச் செலவு குழுவின் அனுமதியின்றி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 5 ரூபாய் 50 சதத்தினால் அதிகரிக்க கடந்த தினம் கோதுமை மா நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன் காரணமாக, அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் மற்றும் அதிக விலைக்கு கோதுமை மாவினை விற்பனை செய்த விற்பனையாளர்களை தேடி சுற்றுவளைப்புக்களை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகார நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கடந்த சில தினங்களாக நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில், அதிக விலைக்கு கோதுமை மாவினை விற்பனை செய்த 200 விற்பனையாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

குறித்த 200 விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்த அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: