200 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு சேவையில் – பேருந்து பற்றாக்குறைக்குத் தீர்வு!

பழுதடைந்த 200 பேருந்துகள் புனரமைக்கப்பட்டு இன்று (22) முற்பகல் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் வைத்து சேவையில் ஈடுபடுத்தப் பட்டன.
போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பேருந்து இறக்குமதியும் தற்காலி கமாக நிறுத்தப்பட்டதுடன், பேருந்து பற்றாக்குறைக்குத் தீர்வாக, பழுதடைந்த பேருந்துகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முதல் கட்டமாக 2020 டிசம்பரில் 273 பேருந்துகள் பழுது நீக்கப்பட்டு இயக்கப்பட்டன. நாடளாவிய ரீதியில் 107 டிப்போக்களில் முற்றாக செயலிழந்திருந்த 200 பேருந்துகள் இரண்டாம் கட்டத்தின் கீழ் 136 மில்லியன் ரூபா செலவில் திருத்தியமைக்கப்பட்டன.
இலங்கை போக்குவரத்து சபை டிப்போ மற்றும் லக்திவ பொறியியல் நிறுவனத்தினால் இலங்கை பொது போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பூரண அனுசரணையுடன் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
இதனிடையே பேருந்துகளின் தரத்தை அவதானித்த ஜனாதிபதி, இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுடன் கலந்துரையாடி அவர்களை ஊக்கப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|