20 வகையான மருந்துகளின் விலைகள் குறைப்பு – சுகாதார அமைச்சு!

எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மேலும் 20 வகையான மருந்துகளின் விலைகளைக் குறைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு விலை குறைக்கப்படும் மருந்துகளில் புற்றுநோய்க்கான மருந்துகளும் உள்ளடங்குகின்றன.
இதேநேரம், சந்தைகளில் குறித்த மருந்துகளின் சந்தை விலைகளைத் திரட்டும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக மருந்துகளின் விலைகளை நிர்ணயிக்கும் குழுவின் தலைவர், டொக்டர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இதுவரை பல்வேறு சந்தர்ப்பங்களில் மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
Related posts:
இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா : தனிமைப்படுத்தல் காலத்தை 21 நாட்களாக அதிகரிக்க முடிவு!
மாணவர்களை இணைக்குமாறு வரும் சிபார்சுகளை தயங்காது நிராகரியுங்கள் - பாடசாலை அதிபர்களுக்கு ஜனாதிபதி பணி...
விபத்தில் சிக்கி யாழ் மக்கள் வங்கி கிளை உதவி முகாமையாளர் பரிதாப பலி!
|
|