20 மைக்றோனுக்கு குறைந்த பொலித்தீனை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக வழக்கு!

Thursday, March 24th, 2016

20 மைக்றோனுக்கும் குறைந்த எடையுடைய பொலித்தீனை விற்பனை செய்த 45 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 20 மைக்றோனுக்கும் குறைந்த எடையுடைய பொலித்தீனை உற்பத்தி செய்த நபர் மீதும் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த வாரம் முதல் இவ்வாறான நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை நாடு முழுவதும் சுமார் 400 பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

20 மைக்றோனுக்கும் குறைந்த எடையுடைய பொலித்தீன் பாவனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை கடந்த மாதம் முதல் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. குறித்த சட்டத்தை மீறுவோருக்கு பத்தாயிரம் ரூபா அபராதமும் இரண்டு வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனையும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டிருந்தது.

பாவனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்று முதல் முழுமையாக நடை முறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts: