20 இலட்சத்து 38 ஆயிரத்து 530 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு – உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவிப்பு!

வாழ்வாதாரத்தை இழந்துள்ள 5 இலட்சத்து 75 ஆயிரத்து 520 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 23 ஆம் திகதிமுதல், மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரேதேச செயலகங்கள் மூலமாக முதற்கட்டமாக இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளமையால், வாழ்வாதாரத்தை இழந்துள்ள 20 இலட்சத்து 38 ஆயிரத்து 530 குடும்பங்கள், 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
சூழல் பாதுகாப்பு தொடர்பாக தீர்மானங்களை சவாலுக்குட்படுத்த முடியாது -ஜனாதிபதி!
ரயில் பயணிகளுக்கு இலத்திரனில் அட்டை அறிமுகம் - போக்குவரத்து, மின்சக்தி, சக்திவலு அமைச்சர்!
பொதுமக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 19 ஆவது திருத்தச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்...
|
|