20 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் புதிய வர்த்தமானி – அமைச்சருமான விமல் வீரவன்ச!

Sunday, September 13th, 2020

இலங்கையின் புதிய அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக 20 ஆவது திருத்தம் தொடர்பிலான புதிய வர்த்தமானி அறிவித்தலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் கூட்டியிருந்தார். அதன்போது தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் காணப்படும் சில பிரச்சினைகள் தொடர்பில் நானும் மேலும் சில கட்சித் தலைவர்களும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அந்த கலந்துரையாடலுக்கு பின்னர் நீதியமைச்சருடன் கலந்துரையாடுவது என நாம் தீர்மானித்தாலும், அதனை செய்ய முடியாமற்போனது. குழுவொன்றை நியமித்து அந்தக் குழுவின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை 20 ஆவது திருத்தத்திற்கு தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காது இருப்பதற்கும், அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து புதிய வர்த்தமானி அறிவித்தலை சமர்ப்பித்து அதனை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றுமு; அவர் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: