20 ஆவது திருத்த்திலுள்ள அரசியலமைப்புக்கு முரணாக விடயங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானத்தை நாடாளுமன்றில் சபாநாயகர் அறிவித்தார்!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்..
இதன்படி நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு விசேட பெரும்பான்மையுடன் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், 4 விடயங்கள் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த நான்கு சரத்துகள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது குழுநிலை விவாதத்தின் போது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
Related posts:
நுகர்வோர் வாரத்தினை முன்னிட்டு பாணின் விலை 50 ரூபாவாக குறைப்பு!
டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுக்காக உரிய நடவடிக்கை வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் தி...
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது!
|
|