20 ஆவது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் அறிக்கை கிடைத்தது – சபையில் சபாநாயகர் அறிவிப்பு!
Tuesday, October 6th, 2020அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் அறிக்கை தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கேள்விக்குட்படுத்தும் வகையில் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், 20 ஆவது திருத்தம் தொடர்பான நீதிமன்றத்தின் அறிக்கை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நேற்றையதினம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அறிக்கை தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதியின் சீனப் பயணம் தொடர்பில் இதுவரை முடியாகவில்லை - இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் தூதரக...
தாமதமான கொடுப்பனவுகளை வழங்குமாறு ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை!
தற்போதைய நிலைமைகளை எடுத்துரைக்க இன்று 8.30 இக்கு மக்களிடம் வருகின்றார் ஜனாதிபதி !
|
|