20 ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய நாளை வரை சந்தர்ப்பம்!

Monday, September 28th, 2020

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி நாளைவரை (29) உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை நீதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தின் முன்வைத்திருந்தார்.

அவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி நீதிமன்றத்தை நாட ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை எதிர்த்து 20 க்கும் குறைவான மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அது குறித்த தீர்ப்பை வழங்க 21 நாட்கள் உயர் நீதிமன்றத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலப் பகுதியில் குறித்த சட்டமூலம் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையையும் நாடாளுமன்றத்தால் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: