20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமைக்கு முக்கியத்துவம் – அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர், உதய கம்மன்பில தெரிவிப்பு!

Thursday, August 20th, 2020

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் பல விடயங்களை நீக்கி 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளும் போது தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை அடிப்படை உரிமையாக இருப்பது போன்ற விடயங்களை பாதுகாப்பது தொடர்பில் கூடுதலாக கவனம் செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர், உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளரகளுடனான சந்திப்பில் அமைச்சர்  மேலும் தெரிவிக்கையில் –

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை தற்போது 5 வருடங்களுக்கு வரையறுக்கப்படுவதைப் போன்று இதனை அவ்வாறே முன்னெடுப்பபதற்கும் ஒருவர் இரண்டு முறை ஜனாதிபதி பதவியை வகிப்பது தொடர்பான விடயங்களிலும் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கூறினரர்.

அத்துடன் அமைச்சரவை கூட்டத்தில் புதிய அரசியல் அமைப்புக்கான யாப்பை தயாரிப்பது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதில் திருத்தங்கள் தொடர்பில், முக்கிய தீர்மானங்கள் பல மேற்கொள்ளப்பட்டன. அரசியல் யாப்பு திருத்தம் குறித்து அமைச்சரவை ஆவணம், அமைச்சரவை குறிப்பு, திருத்தச்சட்டம் முதலானவை தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொள்ளவதற்காக ஜந்து அமைச்சர்களைக்கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அமைச்சரவை துணை குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

நீதியமைச்சர் அலிசப்ரி, கல்வி அமைச்சர் பேராசிரியர். ஜி.எல்.பீரிஸ், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, சக்திவலு அமைச்சர் உதய கம்மன்பில  ஆகியோர் இந்த அமைச்சரவைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மதிப்பீடுகளை மேற்கொண்டு அமைச்சரவைக்கு அவற்றை சமர்ப்பிப்பார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

புதிய அரசியல் யாப்பபை தயாரிப்பதற்காக புத்திஜீவிகள் குழுவை நியமிப்பதற்கு தேவையாயின் அமைச்சரவைக்கு சிபாரிசு செய்வாதற்கு அமைச்சரவையினால் நீதி அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைவாக அவர் பெயர் விபரங்களை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பார். நீதி அமைச்சர் திருத்த வரைவு சட்டத்தை அமைச்சகைக்கு சமர்ப்பிப்பார் என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர், உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான சமகால அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம்  நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: