20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட வரைபு வர்த்தமானியில்!

Thursday, September 3rd, 2020

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைபினை வர்த்தமானியில் உள்ளடக்குவதற்காக அரசாங்க அச்சுத் திணைக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பான வர்த்மானி அறிவித்தல் இன்று (03) வெளியிடப்படும் என அரசாங்க அச்சக பிரிவின் அதிபர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல வரைபு நேற்றையதினம்  02 ஆம் திகதி நீதி அமைச்சர் அலி சப்ரியினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

அத்துடன் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: