20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் – வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் நாடாளுமன்றில் – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்!

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாட்டின் அரசியலில் வலுவான சக்தியாக மாறியுள்ளது. பசில் ராஜபக்ஷ மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தின் மூலம் கட்சிக்கு மகத்தான வெற்றியை ஈட்டித்தந்துள்ளார். நாட்டின் சகல பகுதிகளிலும் அதிகாரத்தை கைப்பற்றி பெரமுனவை அனைத்து மக்களுக்குமான கட்சியாக மாற்றுவது கட்சியின் இலக்காகும் என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மட்டக்களப்பில் கடும் காற்று : மீனவர்கள் பாதிப்பு!
கொரோனா தாண்டவம் : காவுகொள்ளப்பட்ட ஆறு மாத பச்சிளம் குழந்தை - அமெரிக்காவில் உயிரிழப்புகள் 5 ஆயிரத்தை ...
கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை விநியோகிக்க இறக்குமதியாளர்கள் இணக்கம் - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க ...
|
|