20 ஆயிரம் பசுக்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் அவுஸ்திரேலியா!

Friday, April 21st, 2017

தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பால் தரும் பசு மாடுகள் தொடர்பான தொழிற்துறையை மேம்படுத்த அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வணிக ரீதியான பால் பண்ணைகளை ஸ்தாபிக்கும் நோக்கில் 20 ஆயிரம் பசு மாடுகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஒரு தொகை பசு மாடுகள் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளன.

இறக்குமதி செய்யப்படும் உயர்தர பசு மாடுகள் வணிக ரீதியாக பண்ணைகளை நடந்தும் பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.இதற்கு தேவையான மானிய கடன் வசதிகள் இலங்கை வங்கியின் ஊடாக வழங்கப்பட உள்ளன.

இதனை தவிர நவீன பால் பண்ணைகளை ஏற்படுத்தவும் அதன் பணிகளை முன்னெடுக்கவும் விலங்கு உணவு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் பயனாளிகளுக்கு பயிற்சிகளை வழங்க உள்ளதுடன் கால்நடை சுகாதார வசதிகளை வழங்க உத்தேசித்துள்ளது.

முதல் கட்டமாக பயனாளிகளான பால் உற்பத்தியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் பண்ணைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக அவுஸ்திரேலிய நிறுவனமான Wellard நிறுவனம் நியூசிலாந்தில் இருந்து 2 ஆயிரம் பசு மாடுகளை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.

Related posts: