20 ஆயிரம் கிலோ வெல்லத்தை உற்பத்தி செய்ய பனை அபிவிருத்திச் சபை நடவடிக்கை!
Saturday, June 23rd, 2018பனை அபிவிருத்திச் சபையால் இந்த ஆண்டில் கிட்டத்தட்ட இருபது ஆயிரம் கிலோ வரையிலான பனை வெல்லத்தை உற்பத்தி செய்ய சபையின் அபிவிருத்தி பிரிவு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தற்போது சபையில் உற்பத்தி நிலையங்களில் இருந்து பத்தாயிரம் கிலோ வரையிலான பனை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை சிங்கராயர் நகர் மற்றும் மன்னார் போன்ற பிரதேசங்களில் உற்பத்தி நிலையங்கள் ஊடாக கூடுதலான பனை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டும் வருகின்றது. சபையினால் உற்பத்தி செய்யப்படும் பனை வெல்லத்தை இம்முறையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பனை வெல்லத்திற்கு வெளிநாடுகளில் அதிக கிராக்கியும் ஏற்பட்டுள்ளது.
Related posts:
அரச பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்!
கொக்குவில் பகுதி விசேட பொலிஸரினால் சுற்றிவளைப்பு: குழப்பத்தில் மக்கள்!
வழமைக்கு திரும்பியது எரிபொருள் விநியோகம் - பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
|
|