20 ஆம் திகதி புத்த பெருமான் பரிநிர்வாணம் அடைந்த புனித பூமிக்கு இலங்கையிலிருந்து முதல் விமானம்!
Monday, October 18th, 2021இந்தியாவின் குஷி நகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளைமறுதினம் (20) திறக்கப்படவுள்ளது.
உத்தர மாநிலத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இடமான குஷி நகரானது பௌத்த வழிபாட்டு தலங்களைக் கொண்டமைந்துள்ளது. அத்துடன், புத்த பெருமான் பரிநிர்வாணம் அடைந்த இடமாகவும் இது கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த விமான நிலைய திறப்பு விழாவிற்கு பல நாடுகளில் உள்ள பௌத்த தேரர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
அந்தவகையில், 100 தேரர்களுடனான விமானமொன்று இலங்கையிலிருந்து குஷி நகர் விமான நிலையத்துக்கான முதலாவது விமானமாகப் புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறப்புற நடந்து முடிந்த சந்நிதியானின் இரதோற்சவம்!
கொக்குவில் பகுதியில் ஹெரோயின் வியாபாரம்செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது -1,530 மில்லிகிராம் ஹெரோயின...
வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை - சிவில் விமான சேவைகள் அதிகார சபை!
|
|