20ஆவது திருத்தத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் – அரசாங்கத்திடம் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரிக்கை!

Tuesday, October 13th, 2020

இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என அரசாங்கத்திடம் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்தாவது –

மக்களின் இறைமை அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன்னர் அதனை விரிவாக ஆராய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அதிகாரங்களும் தனி ஒருவர் வசமாவது ஜனநாயக நாட்டிற்கு பாதகமான விடயமாக அமையும் எனவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்களின் உண்மையான ஜனநாயக நிலைப்பாட்டை காண்பிப்பதில்லை எனவும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது.

இதேவேளை, 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டாம் என இலங்கை அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை நேற்றைய தினம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மனித சிந்தனை சுதந்திரம் மற்றும் செயற்பாட்டிற்கு பாரிய இடையூறுகளை ஏற்படுத்தும் என்பதால் அதனை நிறைவேற்ற வேண்டாம் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: