20ஆவது அரசியமைப்பு திருத்த முன்வரைபிலும் மாற்றம் ?

Wednesday, September 9th, 2020

நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தின்போது 20ஆவது அரசியமைப்பு திருத்தத்தில் மாற்றங்களை செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறதது என செய்திகள் வெளியாகியுள்ளன.

20ஆவது அரசியல் அமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும் அரசாங்கத்தில் பலர் இந்த திருத்தத்தில் உள்ள சில சரத்துக்கள் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக இரட்டை குடியுரிமை, கணக்காய்வு ஆணைக்குழு, அமைச்சரவையின் வரையறை போன்றவை இதில் அடங்குகின்றன.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் 20ஆவது திருத்தம் தொடர்பில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது மாற்றுக்கருத்துக்களை இதுவரை பதிவுசெய்துள்ளனர்.

20ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். இந்நிலையில் குறித்த உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்கவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்க வேண்டாம் - கடு...
சீனா போன்ற பெரிய கடன் வழங்கும் நாடுகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு கடன் நிவாரணத்தை வழங்குவதற்கு விரைவாக...
யாழ்ப்பாணத்தில் தொழில் தேடுவோரை பதியும் நடவடிக்கைகள் ஆரம்பம் - மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு!