2 பில்லியன் ரூபா பொருட்களுடன் கொழும்பு வந்த சீனக்கப்பல் – இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவிப்பு!

சீனாவினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
மொத்தம் 24 கொள்கலன்களில் 255 மெட்ரிக் தொன் எடையுடைய மருத்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகளை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளதாக சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு ஜனவரி முதல் ஓய்வூதிய திட்டம்!
தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வர்த்தக சந்தை!
அமைச்சர் டக்ளஸ் முன்மொழிவு – அழகுபடுத்தி அபிவிருத்தி செய்யப்பட்ட வேலணை வங்களாவடி நகரம் மக்கள் பாவனைக...
|
|