2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகளுடன் இன்று அதிகாலை நாட்டுக்குள் வந்த விசேட விமானம்!

Sunday, March 7th, 2021

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸின் திட்டத்தின் கீழ் 264,000 தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.

கொவெக்ஸ் திட்டம் மூலம் இலங்கைக்கு வழங்கப்படும் 14 இலட்சத்து 40 ஆயிரம்  தடுப்பூசிகளில் முதல் கட்டமாக 2 இலட்சத்து 64,000 அஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகள், யுனிசெப் அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்டு, இன்று அதிகாலை நாட்டுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாளைமுதல் நாடளாவிய ரீதியில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

முன்பதாக கொவெக்ஸ்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சுகாதார அமைச்சுக்கு 14 இலட்சம் அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டு இலட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.

தடுப்பூசியை இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே விமான நிலையத்தில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன்போதே 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாளைமுதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொவிட் வைரஸ் நோயின் தாக்கம் அதிகமாக உள்ள பிரதேசங்களில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தத் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் செயற்றிட்டம் நிறைவடைந்ததன் பின்னர் கண்டி மாவட்டத்தின் அபாய வலயத்திலுள்ள மக்களுக்கு தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்திருந்மை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: