2 ஆவது நாளாகவும் 5 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!

Saturday, July 31st, 2021

கொவிட் தடுப்பூசி செலும் வேலைத் திட்டத்தின் கீழ் 5 இலட்சத்து 13 ஆயிரத்து  820 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதன்படி, தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் 5 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கு  ட்விட்டர் பதிவொன்றில் இலங்கையை பாராட்டி உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்து தெரிவித்திருந்தது. கொவிட் தடுப்பு நடவடிக்கையின் கீழ், இலங்கையில் நேற்றுமுன்தினம் மாத்திரம் இலங்கையில் 5 இலட்சத்து 15 ஆயிரத்து 830 பேருக்கும் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: