2ஆம் உலகப்போரை உலகுக்கு அறிவித்த செய்தியாளர் காலமானார்!

2ஆம் உலகப்போரை முதன்முதலாக உலகுக்கு அறிவித்த பெண் பத்திரிகையாளர் க்ளெயார் ஹொலிங் வேர்த் தனது 105 ஆவது வயதில் நேற்றுக் காலமானார் .
பிரிட்டன் ஊடகங்களில் உலகின் முக்கிய பிரச்சினைகளை கள நிலைவரங்களுடன் தொகுத்து தரும் செய்தியாளராக இவர் பணியாற்றினார்.
போலாந்துக்குள் ஹிட்டலரின் நாஸிஸப் படைகளை புகுந்ததை முதன்முதலாக உலகுக்கு அறிவித்தவர் இவரே. 2ஆம் உலகப் போருக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருந்தமையை அடுத்து அவர் அங்கிருந்து உடனடியாக பிரிட்டன் ஊடகங்களுக்கு தெரிவிக்க நினைத்த கிளெயார் அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். இந்தச் செய்தியை இவர்களுக்கு கூறியது மட்டுமல்லாமல் தொலைபேசி ரிஸீவரை தொங்கவிட்டு கள நிலவரத்தை துள்ளியமாக அவர்களுக்கு உணர்த்தினார். 1970 முதல் பீஜீங்கில் பணியாற்றி வந்த கிளெயார் கடந்த சுமார் 30றகும் மேற்பட்ட வருட காலத்தை ஹொங்கொங்கிலேயே கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|