1980 ஆண்டுக்கு முன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பதிவுகளின்படி 75 சதவீதமான விசாரணைகள் முழுமை பெற்றுள்ளன – காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு!
Monday, August 7th, 20231980 ஆண்டுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பதிவுகளின் படி 75சதவீதமான விசாரணைகள் முழுமை பெற்றுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் ஊடாக மூன்று கட்டமாக பகுப்பாய்வு முன்னெடுக்கப்படுகின்றது. இவற்றில் 2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டோவர்களின் பதிவின் விசாரணைகள் மற்றும் 2000 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பதிவுகளுக்கான விசாரணைகள் 1980 ஆவது ஆண்டுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட வர்களின் பதிவின் விசாரணைகள் என காணப்படுகின்றது.
இவற்றில் இன்றைய காலப்பகுதியில் 1980 ஆண்டுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பதிவுகளின்படி 75 சதவீதமான விசாரணைகள் முழுமை பெற்றுள்ளது.
இதில் இரண்டாம் கட்டப்பதிவாக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் படி மக்கள் வழங்கிய தரவுகளும், ஆதரவுகளும் எமக்கான 2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டோவர்களுக்கான விசாரணையினை முன்னெடுத்து வருகின்றோம்.
யாழ்ப்பாண பிராந்திய மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலத்தின் எற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோ வர்களின் 2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டோவர்களின் விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கை 06.08.2023 அன்று கல்வியங்காட்டில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்தில், யாழ்ப்பாண பிராந்திய மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலத்தின் அதிகாரி ப.தற்பரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் களவிஜயத்தினை மேற்கொண்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், விசாரணைகளை மேற்கொள்ளுவதற்கு குற்றபுலனாய்வு, சட்டமா அதிபரின் அறிக்கைகளையும் பெற்றுவருகின்றோம். சந்தேகத்திற்கு இடமான கோவையினையும் பெற்றுவருகின்றோம்.
இவற்றில் 14,988 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கோவைகளுக்கான விசாரணை மேற் கொண்டுள்ளோம். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இடர்கால நிவராணங்களை வழங்குகின்றோம். அது மருத்து உதவிக்காகவும் காணப்படுகின்றது.
ஆனால் இழப்பீடு என்பது கொடுக்க வில்லை. உண்மையினை கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கு என்ன நடந்தது என்றதன் பின்னர்தான் உரிய செயற்பாடு முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|