19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை : வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!
Friday, October 1st, 2021நாட்டின் 19 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான சாத்தியமிருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதன் தாக்கம் நாளை மதியம் 12.00 மணி வரை இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் அனர்த்த பேரிடர் முன்கூட்டிய எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மி.மீற்றருக்கு மேல் கன மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
000
Related posts:
தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் – ஜனாதிபதி!
கிளிநொச்சியில் ஆசிரியைகளை கடத்த முயற்சித்த காடையர்கள் மடக்கிப் பிடிப்பு!
நாளை முதல் மதுபான நிலையங்கள் பூட்டு!
|
|