19 மாவட்டங்களில் நெல் கொள்வனவு – திறக்கப்பட்டிருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவிப்பு!

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் தற்போது 1 இலட்சத்து 15 ஆயிரம் கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
19 மாவட்டங்களில் நெல் அறுவடையை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றது.
தற்போது சபை 1 இலட்சத்து 15 ஆயிரம் கிலோ நெல்லைக் கொள்வனவு செய்துள்ளது. நெல்லைக் களஞ்சியப்படுத்துவதற்காக 300 களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டிருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.
அத்துடன் நெல் கொள்வனவுக்காக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விவசாயத்திற்கே முன்னுரிமை – ஜனாதிபதி கோட்டபய உறுதிபடத் தெரிவிப்பு!
புத்தாண்டு தினத்தன்று வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு : 758 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாள...
மடு திருத்தல ஆடித் திருவிழாவில் 30 பக்தர்களுக்கே அனுமதி - வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதியில்லை!
|
|