19 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – நெருக்கடி நிலையில் இந்தியா – பிரதமர் நரேந்திர மோடி!
Tuesday, April 14th, 2020எதிர்வரும் நான்கு வாரங்கள் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை தடுப்பதில் நெருக்கடியான நிலை இந்தியாவில் தோன்றியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
முதன்முதலாக கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி இந்தியாவில் தொற்று பதிவான நிலையில், இந்தியா அதனை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதி நடவடிக்கையாக 21 நாள் முழு இந்தியாவும் முடக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இது அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் தொடர்ந்தும் தமது வீடுகளில் அடைபட்ட நிலையில் உள்ளனர்.
இது தவிர, இந்தியா முழுவதற்குமான வீதி, தொடரூந்து மற்றும் விமான போக்குவரத்துக்கள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்ட நிலையில் உள்ளன. இந்தியா இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து உலகளாவிய ரீதியாக சுகாதார நிபுணர்கள் அவதானித்து வருகின்றனர்.
காரணம், இந்தியா பூகோள ரீதியாக பெரும் நிலப்பரப்பை கொண்டுள்ளதுடன் அதிக அளவிலான ஜனத்தொகையையும் கொண்டுள்ளது.
இது தவிர, நலிவடைந்த சுகாதார தன்மையையும் கொண்டுள்ளதனால் இந்த உயிர்கொல்லியினை முற்றாக அழிப்பதற்கான தன்மையை இந்தியா கொண்டுள்ளதா? இந்தியா எப்படியான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்பது குறித்தே சர்வதேச சுகாதார நிபுணர்கள் அறிய ஆவலுடன் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 505 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான மேலும் 26 ஆயிரத்து 77 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 610 ஆக அதிகரித்துள்ளதோடு 5 லட்சத்து 86 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 717 பேர் பலியாகியுள்ளனர் என அமெரிக்க சுகாதார அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் 11 ஆயிரத்து 329 பேர் பலியாகியுள்ளதோடு 88 ஆயிரத்து 621 பேர் பாதிக்கப்பட்டு;ள்ளனர்.
இதுதவிர ஸ்பெயினில் 547 பேரும்;, இத்தாலியில் 566 பேரும் பிரான்சில் 574 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் பலியாகியுள்ளனர்.
இந்தநிலையில் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்று ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 587 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் 19 லட்சத்து 23 ஆயிரத்து 280 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
எவ்வாறாயினும் 4 லட்சத்து 43 ஆயிரத்து 886 பேர் குணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
|
|